Tuesday, September 11, 2012

புலம்பல்

எங்க பார்த்தாலும் என்ன என்னமோ நடக்குது
ஒரு பக்கம், அணு மின்நிலையம் வேணாம்னு போராட்டம்
இன்னொரு எடத்துல, dam அழைத்த அதிக படுத்த வேண்டாம்னு போராட்டம்
அரசாங்கம் ஒருத்தனை கைது பண்ணுது
கேட்ட இந்தியாவையே ஒரு cartoon வரைஞ்சி அசிங்கப்படுத்திடான் சொல்லுது
இவளோ பிரேச்சனைக்கு நடுவுல நன் என்ன பண்ணேன்
நாலு siteah மேஞ்சிட்டு.. வெட்டி நியாயம் பேசிட்டு
cubeல வந்து வேற என்ன நடக்குது பாக்கும்போது
சுமார் 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பம் flashஆச்சி
என்னோட அம்மா கையில தொடபகட்டை எடுத்து கிட்டு தொரதிகிட்டே வராங்க
நானும் ஓடுறேன் ஓடுறேன் ஓடிகிட்டே இருக்கேன்
கொஞ்ச நேரம் பொருத்து, அவங்க சத்தம் ரொம்ப தூரத்துல கேக்குது
சனியனே படி படினா படிக்காம இப்போ ஓடுறிய?
ஓடு ஓடு.. திரும்பி வீடுக்குதனே வரணும்
அத கேட்டு கிட்டே ஓடினதுல.. களத்துமேடே வந்துடிச்சி
சரி இவளோ தூரம் வந்துடோமே, அப்படியே கில்லி விளையாடிட்டு
கொஞ்சம் நேரம் போறத்து போனா, அம்மா மறந்து மன்னிச்சிடுவங்க
இருட்டுற நேரம் வரைக்கும் விளையாடிட்டு.. night போனா
கொஞ்சம் தேவல.. நன் ஏன்டா உன்ன அடிகபோறேன் நீ நல்லா படிச்சா
நீ நல்லா படிச்சா தானே.. நல்ல college seat கிடைக்கும்
அப்போதானே நல்ல வேலை கிடைக்கும்
இப்படி பல அடி தடிக்கு அப்புறம்.. annual examla மட்டுமே pass பண்ணி
schoolah விட்டு வெளிய வந்து.. எப்படியோ ஒரு degeree முடிச்சா..
என்னாது bsc degree ya.. இத வச்சுக்கிட்டு வேல வேற கேப்பிய நீ?
உன்கூட school படிச்சவன் எல்லாம்.. BE முடிக்க போறான் அடுத்த வருஷம்..
அவனுக்கு வேலை கொடுப்பாங்களா இல்ல உனக்கு கொடுப்பாங்களா?
இப்படி பல அசிங்கத்துக்கு அப்புறம்.. சரின்னு ஒரு வழியா மனச தைரிய படுத்திக்கிட்டு..
இன்னொரு degree சேர்ந்து.. அதையும் முடிச்சி.. எப்படியோ ஒரு வேலை வாங்கி..
seat ah தேய்க்கிறது flash ஆச்சி.. சரி நாளைக்கு என்ன பண்ணுவ?
இதே seat ah தேய்ப்பேன் இல்ல இன்னொரு company seat ah தேய்ப்பேன்
இத பாக்குறப்போ என்னக்கு அடி கடி கேள்வி பட்ட அர்த்தம்முள்ள joke தான் நியாபகம் வருது
ஒரு அப்பா அவர் 
பைய்யன் கிட்ட நல்லா படிடான்னு சொல்லுறார்
பைய்யன்: என்?
அப்பா: அப்போ தான் நல்ல college seat கேடைச்சி, நல்ல வேலைக்கு போகலாம்
பைய்யன்: என்?
அப்பா: அப்போ தான் நல்ல பணம் கேடைக்கும்
பைய்யன்: அப்புறம்?
அப்பா: அப்போ தான் நல்ல settle ஆயிட்டு, என்ன மாதிரியே காலாடிக்கிட்டு இருக்கலாம்
பைய்யன்: அத தான் நன் இப்பவே பன்னுரேனே
நாம எப்பவுமே.. இந்த மாதிரி joke கேட்டதும் சிரிச்சிட்டு அப்புறம் மறந்துடுவோம்
நாம நல்லா சம்பாதிச்சிட்டு அப்புறம் காலாட்டுற machine ah தான் வளந்து இருக்கோம்
எவன் எக்கேடு கேட்டு போன என்ன.. எனக்கு கடைசி வாரம் சம்பளம் வந்திடும்
டேய் இவளோ பேசுறியே.. நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கராநு கேக்க தோணுதா?
என் மனசாட்சி என்ன பாத்து கேட்ட 42 கேள்வில 38அ  இங்க எழுதிட்டேன்
மிச்ச 4லு கேள்விய என்னாலேயே காது கொடுத்து கேக்க முடியல
நாமலாம் அந்நியன் பட dialogueஅ புள்ளரிச்சிகிட்டே பாத்துட்டு
வெளிய வந்து songsலாம் பிரம்மாண்டமா இருக்கு சொல்லுற கூடம்

1 comment:

  1. ரொம்ப சிம்பிள்..!!!
    நம்மள மாதிரி நடுத்தர வர்க்கம் அமைதியா தான் இருந்தாகணும்...!
    எதாவது புரட்சியா யோசிச்சா, அம்மா அப்பா பொண்டாட்டி புள்ள எல்லாரும் கண்ணு முன்னாடி வந்து நிப்பாங்க...

    ஆனா ஒன்னு, எல்லா நாட்லயும் எப்போ பெரிய புரட்சி வெடிச்சாலும் அதுக்கு பின்னணியில நம்மள மாதிரி பொறுமையா இருக்குறவங்க பொங்கி எழும்போது தான்...!!!

    ReplyDelete