Tuesday, April 3, 2012

எனக்குப் பிடித்த பாடல் வரிகள்: கலைவாணர் NSK

பணம் பற்றி
**************
கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கி கொண்டாயோ
கிண்டி ரேசிலே சுத்தி கிறுகிறுத்தாயோ

பூமிக்குள் புகுந்து புதையல் ஆனாயோ
புன்னகையாய் பெண் மேல் தூங்குகின்றாயோ
சாமிகள் அடிதனில் சரண் புகுந்தாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இறக்கம் உள்ளவரிடம் இருக்காத பணம்தானே
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ
சூடம் சாம்ப்ரானியாய் புகைந்து போனாயோ

எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே

மாதச் சம்பளம் பற்றி
********************
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லறையை போட்டு வைப்பார் தேதி ஒன்னிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லறையை போட்டு வைப்பார் தேதி ஒன்னிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயை கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயை கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொன்னிலே

சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்கதொன்னிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொன்னிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒன்னிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொன்னிலே

அறிவியல் பற்றி
*****************
ஆகாரம் சமைக்க சூரிய ஓலில் அடுப்பை முடூறாங்க
ஆண்ணை பெண்ணாக பெண்ணை ஆணாக ஆளையே மாத்துறாங்க

எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கை என்குறாங்க
இனி இயற்கையும்கூட செயற்கையால் ஆகும் முயற்சி பண்ணுறாங்க

No comments:

Post a Comment