Sunday, April 15, 2012

நண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம், இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம்?

நண்பன் கல்யாணத்துக்கு எதுக்கு போறோம்,  இல்ல தெரியாம தான் கேக்குறேன் எதுக்கு போறோம்?
வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றம் நடக்குது.. அதுக்கு நம்ம வாழ்த்தை நேர்ல சொல்ல போறோம்
சரி அதுக்கு மட்டும் இல்ல.. நச்சுனு நாலு பொண்ணு வரும், பாத்து பேசி உஷார் பண்ணலாம்னும் தான் போறோம்
அனா என்ன நடக்குது அங்க.. கல்யாண மண்டபத்தையே அலசினாலும் ஒன்னோ இல்ல ரெண்டோ தான் பாக்குறா மாதிரி இருக்கும்
அந்த ஒன்னு ரெண்டு கூடவே ஒரு பையன் சுத்திகிட்டே இருப்பான்..
அப்பவே நம்ம ரிசல்ட் தெரிஞ்சிடும்.. சேரி அப்படியே விட்டுட முடியுமா?
வேட்டையாடு விளையாடு கமல் ஹசன், நான் மகான் அல்ல கார்த்திக் இடத்துல நம்மள நிக்க வச்சு ஆறுதல் சொல்லிக்கிட்டு
எந்த நண்பன் கல்யாணத்துக்கு வந்தமோ அவன் கிட்ட பொய்.. மச்சி யாரு டா அது?
அவனுக்கு உடனே தெரிஞ்சிடும்.. இருந்தாலும் யாருடா அந்த பச்சை தாவணியா? இல்ல
அந்த மஞ்சள் பொடவையா? இல்லடா ரெண்டு பேருக்கும் நடுவுல பர்புள் சுடிதார்
தெரியலையே.. ஒரு வேலை பொண்ணு வீடு அஹ இருக்கும்.. கேட்டு சொல்லுறேன் மச்சி..
நாம விடாம.. உண்மைய சொல்லுடா.. அவ உங்க வீட்டுப் பக்கம் இல்லையா?
இவன் உண்மைய தான் சொல்லுறானா.. ஒரே கொழப்பம்..
காலம் கலி காலம்.. நம்மள மாதிரியே பல பேரு கல்யாணத்துக்கு வந்து இருபங்க
அப்படின்னு நாமலே முடிவு பண்ணி அடுத்த கட்ட ஆராய்ச்சில இறங்குவோம்
நம்ம வாழுறது 21st century.. technology நெறைய இருக்கு.. நாம face detection ல புலியாச்சே..
ஒரு போட்டோ கெடைச்சா.. வீட்டுக்கு பொய் fb ல search பண்ணிக்கலாம்னு ஐடியா வரும்
அடிச்சி புடிச்சி ஒளிஞ்சி மறஞ்சி ரெண்டு மூணு போட்டோவும் எடுப்போம்..
இதலாம் நடக்கும் பொது.. கூட வந்த நம்மள மாதிரி தனியாள் ஒருத்தன்..
மாப்பிள்ளை காத கடிப்பான்.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுற மாதிரி..
ஒரு வேலை இவனும்.. அந்த பர்புல பத்தி தான் கேக்குறானோ?
இப்படி பல சமாச்சாரத்துக்கு நடுவுல.. வந்த கல்யாணமும் முடிஞ்சிடும்..
சரி கல்யாண சாப்பாடு எப்படி இருக்குன்னு ஒரு கை பாத்துட்டு... கெளம்பிடுவோம்
வீட்டுக்கு வந்த அப்புறம்.. ஒளிஞ்சி நெளிஞ்சி எடுத்த போடோவ fb தேடலாம்னு ஐடியா வரும்
சரின்னு நண்பன் fb profile பார்த்தா... heart attack வரும்.. 1000 நண்பர்கள் இருபங்க
அதுல பாதிக்குமேல பொண்ணுங்களா இருக்கும்.. fb ல வளைச்சி வளைச்சி request கொடுத்து இருப்பான்போல
ஒரு வழியா மனச தேத்திகிட்டு அந்த 500 friends profile அஹ கேளருவோம்..
களற களற பூகம்பம் மாதிரி பல உண்மைகள் வெளி வரும்..
ஆனா கடைசி வரைக்கும் நாம தேடுற ஆள் இருக்காது...
ஒரு வேலை நண்பன் பொண்ணு வீடா இருக்கும்னு சொன்னது உண்மைதானோ?
ச்சா ஒரு நல்லவனை சந்தேகப் பட்ட குற்ற உணர்ச்சி மரயரத்துக்குள்ள
இன்னொரு மெயில் வரும் "My Marriage Invitation "
மீனா போனா ரீனான்னு மனச தேத்திகிட்டு அடுத்த கல்யாணத்துக்கு டிக்கெட் பூக்பண்ணுவோம் :)
 

2 comments:

  1. சுவாரசியமா இருக்கு!
    ஃபேஸ்புக்குல இல்லாத பெண்களும் உண்டு... நிஜ நண்பர்கள் ஃபேஸ்புக்குளையும் நண்பர்களா இருக்கணும்ன்னு அவசியமும் இல்லை!
    தொடர்ந்து எழுதவும் :)

    ReplyDelete
  2. He he he... Siva... Kalakittel pongo... :P

    ReplyDelete