Monday, April 11, 2011

நடுத்தர மக்களும் வாக்குப்பதிவில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்

நகர மக்கள் மற்றும் பிற நகரங்கள் அல்லது மாநிலம்களுக்கு வேளைக்காக சென்றவர்கள் வாக்கு பதிவில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்று கடந்த சில தேர்தல்கள் கூறுகிறது,  இந்த நிலை வருகின்ற தேர்தளில்லாவது மாறுமா?   தேர்தலில் வாக்கு அளிப்பது நம் உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட.   அண்மையில் அம்பலமாகிய ஊழல் விவகாரங்களை பற்றி நாம் எதிர்ப்பு தெரிவித்தோம் எப்படி பேஸ்புக் நிலை, மின்னஞ்சல்கள் மூலமாகவும் இது நல்லது தான் ஆனால் நாம் நம் எதிர்ப்பை மற்றும் தீர்ப்பை அளிக்க வேண்டிய மேடை தேர்தல் களம், இங்க நாம் நம் கடமையை செய்யாமல் மற்றவர்கள் மீது குறை கூறுவது நம்மை நாமே குறை கூறுவது போல் ஆகும்.

நடுத்தர மக்கள் ஏன் பேரு வாரியில் பங்கேற்க வேண்டும்?   கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலில் 70% வாக்குகளே பதிவாகின இதில் பெரும் பங்கு கிராமபுரதிலிருந்து,  இதை நன்கு அறிந்துள்ள அரசியல் வாதிகள் அவர்களை வாக்குக்காக மட்டும் கவரும் விதத்தில் இலவசங்களை கண்பிது வாக்கு செகரிகிரர்கள்,  இது போன்ற இலவசங்கள் நடுத்தர மக்களிடையே பெரிய தாக்குதலை ஏற்படுத்துவது இல்லை,  நாம் அனைவரும் வாக்களிக்க ஆரம்பித்தால் இலவசங்கள் மற்றும் பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்கிற நிலை மாறும்.   நாம் செலுத்தும் வரிப்பணம் நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களில் செலவழிக்கப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ஒரு கேள்வி:  ஒருவன் பசியோடு இருக்கிறான் அவனுக்கு தினமும் சோறு போடுவது முறையா அல்லது தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அவனுக்கு உதவி செய்வது முறையா?
 

4 comments: